கைவிடப்பட்ட எனது பழைய ப்ளாக்  பெருவழிகல் மீண்டும் ..


Thursday, 28 April 2011
"இந்த சமூகத்தின்
தொப்புள் கொடிக்கு எதிராக
துப்பாக்கி முனை நீட்டப்படும்போது
ஒரு மெல்லிய பூ நுனியின் மேல் அமரும்
வண்ணத்துப்பூச்சியின்
கனவு என்பது
எனக்கு சம்பந்தமற்ற
சம்பவிப்பு மட்டுமே"

தனது கவிதைகளை தீயிலிட்டு தற்கொலை செய்து கொண்ட ஈழத்துக் கவிஞர் சிவரமணியின் இந்த கவிதை ஒரு சம்பவம் அல்ல,்பேரதிர்வு.

குடந்தை பள்ளியில் மாணவர்கள் கருகியபோது என் பால்யம் எரிந்தது போல் நெஞ்சம் பதறியது.பாப்பம்பட்டி,கீரிப்பட்டியில் தலித்துகள் விரலுக்கு மறுக்கப்பட்ட ஓட்டு மை எனது முகத்தில் பூசப்பட்டது. என் பயணங்களில் கடந்த ஒவ்வொரு வேகத்தடையும்உத்தமபுர சுவராகவே தெரிந்தது.அடுப்பு உலைக்கு வழியில்லாத போது அணுஉலைக்கு போடப்பட்ட கையெழுத்தால் என் ஓட்டு செல்லாத ஓட்டானது.டாஸ்மாக் லாபத்தில் அரசு தரும் நலத்திட்டங்களில் சாராய வாடை அடிக்கிறது.இப்படி எழுதுவதற்க்கு எவ்வளவோ இருக்கிறது.

சக மனிதனுக்கு,சமுதாயத்திற்க்கு அபாயம் வரும்போது பேனாக்கள் போர்வாளாகின்றன.நம் பூமியின்,மனித இனத்தின் புனிதத்தைக் காக்கும் பணியில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற ஆா்வமே "பெருவழிக்கல்"


Comments

Popular Posts