வலிகளால் ஆசிர்வதிக்கப் பட்டவன்

கண்களை தந்து விட்டேன்
நீ விரும்பிய
கனவு காணலாம்
குருடனின் கனவுகள் பலிக்காது...

கால்களைத் தந்து விட்டேன்
கல்லிலும் முள்ளிலும் நடக்கலாம்
லாடமடித்த கால்களுக்கு வலியேது?

உளிகளைத் தந்து விட்டேன்
தடைகளை தகர்த்து எறியலாம்
காயங்களே உனக்கு கூலி....

விதைகளைத் தந்து விட்டேன் காடு மேடெங்கும் விதைக்கலாம்
மலட்டுச் செடிகள் பூக்காது....

கவியெழுத காலம்
உனக்கு வகுப்பெடுக்குமென
வலிகளால் ஆசிர்வதிக்கப் பட்டவர்களில்
நானும் ஒருவன்.....

Comments

Popular Posts